இன்றைய உலகம் எப்படி இருக்கிறது?  இந்திய மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?  தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்?  தமிழ்நாடு எவ்வாறு உள்ளது?

எம்மிடம் ஆயிரக்கணக்கான குறிப்புகள் இருக்கின்றன.  ஆயிரக்கணக்கான தகவல்களைச் சேகாித்து வைத்துள்ளோம்.  தொன்னூற்றி எட்டாமாண்டு வேலையில் சேர்ந்ததற்குப் பின்,  ஏராளமான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தோம்.  வேலைக்குச் சேர்வதற்கு முன்பிருந்தே யாம் ஜுனியர் விகடன் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம்.  தொன்னூற்றி ஒன்பதாமாண்டு ஜனவாித் திங்களிலிருந்து தினமலர் வாங்க ஆரம்பித்தோம்.  ஜுனியர் விகடன்,  ஆனந்த விகடன்,  இந்தியா டுடே தமிழ் பதிப்பு,  குமுதம் உட்பட பல்வேறு புத்தகங்கள் வாங்கிப் படித்தோம்.

யாம் படித்ததில் முக்கியமான செய்தி என அறிவதை குறித்து வைத்துக் கொண்டோம். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறையோ தேவைப்படும் குறிப்புகளை வெட்டியெடுத்துத் தனியாகப் பத்திரப்படுத்தினோம். புதிய உலகம் செய்வதற்கு எந்தந்தத் தகவல்கள் அவசியம் என யாம் உணர்ந்தோமோ, அவற்றைத் தனியாக எடுத்துக் கொண்டோம். கல்வி, சமூகம்,  அரசியல்,  அரசியல்வாதிகள்,   சினிமா,  அறிவியல்,  இலக்கியம்,  வரலாறு, மனிதர்கள்,  மனம்,  தாவரம்,  விலங்குகள்,  பாிமாணம்,  விவசாயம், எதிர்காலம், தத்துவம் மற்றும் பிற (எக்ஸட்ரா) போன்ற பல்வேறு தலைப்புகளில் உறைகள் எழுதி, மாதாமாதம் வெட்டியெடுக்கும் தகவல்களை தனித்தனியாக அந்தந்த உறைகளில் போட்டு வந்தோம். இப்படியாக, யாம் இரண்டாயிரத்து ஒன்பது, டிசம்பர் வரை கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள் புதிய உலகம் செய்வோம் புத்தகம் தொடர்பான தகவல்களைச் சேகாித்து வந்தோம். தினமலர்,  ஜுனியர் விகடன் தகவல்களே அதிகமாக இடம் பெற்றன.

மேலும் தொடர இங்கே க்ளிக் செய்யவும்