20.08.2014
ஆலமரம்
1. பள்ளிக் கூட ஆலமரத்தில் நண்பா்களோடு விளையாடுகிறோம்.
ஊருணி
2. ஊருணியில் மீன் பிடிக்கிறோம். ஊாின் மேற்கே மிகப் பிரம்மாண்டமான மலை தெரிகிறது. அடா்ந்த காடுகள் உள்ளன. மலையேற பாதைகளும் தென்படுகின்றன. இந்த மலையை இத்தனை வருடங்களாக எப்படி பார்க்காமல் இருந்தோம் என ஆச்சாியம் கொள்கிறோம்.
கிணறு
3. ஊாின் மேற்கே நேரு தோட்டத்தில் அழகிய படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு தெரிகிறது. தண்ணீர் மிகவும் தௌஇவாக படிகம் போன்று உள்ளது. அதில் இறங்கிக் குளிக்கிறோம். பெருமாள் கோவில் முன்புறம் பரந்த கொத்தமல்லித் தோட்டம் காணப்படுகிறது. கொத்துக் கொத்தாக பச்சைப் பசேலென மல்லிப் பயிர் வளர்ந்துள்ளது. மாமாவிடம் இது என்ன பயிர் எனக் கேட்கிறோம். நமக்கே தெரியுமே, பின் எதற்கு மாமாவிடம் கேட்கிறோம் என நினைத்துக் கொள்கிறோம். மேற்கே இன்னும் சற்று தள்ளி பெரிய ஓடையொன்று இருக்கிறது. தண்ணீர் கொஞ்சமாக ஓடுகிறது. கருவேல மரங்களாக உள்ளன. ஓடைக் கரையில் ஒரு கிணறு இருக்கிறது. கிணற்றில் இரு ஆண்கள் குளிக்கிறார்கள். ஒருவருக்கு பெண் போல் மார்பு பொியதாக இருக்கிறது. இருவரும் முத்தமிடுகிறார்கள். அதிர்ச்சியில் கண் விழிப்பு வந்துவிட்டது.
பால் கெண்டை
4. ஊாின் கிழக்குக் கண்மாயில் படிக்கட்டு போன்ற அமைப்பில் தண்ணீர் ஓடுகிறது. பால் போன்ற தண்ணீர். காவிாியிலிருந்து வருவதாகச் சொல்கிறார்கள். பெரிய நீரோடை ஊாின் வடக்கேயிருந்து வருகிறது. படிக்கட்டு தண்ணீருக்குக் கீழே நுால்வலை வைத்து மீன் பிடிக்கிறார்கள். வலையை இழுத்துச் செல்லாமல் இருப்பதற்காக அதனுள் பெரிய கற்களை வைத்திருக்கிறார்கள். அயிரை மீன்கள் வலை கொள்ளாத அளவிற்கு மாட்டுகின்றன. இழுக்க முடியாமல் வலையை இழுக்கிறார்கள். பக்கத்திலேயே குவித்து வைத்து விற்கிறார்கள்.
Leave A Comment