நாம் வாழும் இந்தப் பூமி மிகவும் செழிப்பானது. கோடானகோடி உயிர்க்குலங்கள் இங்கே நிறைந்துள்ளன. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்கின்றன. பரிணாமத்தில் இனம் அல்லது சிற்றினம் எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட தொகுதி விலங்குகள் தங்களுக்குள் மிகுந்த ஒத்துழைப்போடும், புரிந்துணர்வோடும் வாழ்ந்து வருகின்றன .

உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதரும் ஒரே இனமாகத்தான் கருதப்படுகிறார்கள். பெருங்கூட்டமாக வாழ்ந்துவரும் மனிதர்களுக்குள்ளும் தகுந்த ஒத்துழைப்பும், புரிந்துணர்வும், நட்பும் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. மனிதரின் இத்தனை முன்னேற்றங்களுக்கும் இந்த ஒத்துழைப்பே காரணம். மனிதர்களுக்குள் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்து போட்டி, பொறாமை, பகை ஏற்படுவது இயல்பே. எனினும் வாழ்க்கைத் தேவைகள் எதுவுமின்றி, சாதி, மதம் போன்றவற்றிற்காக மனிதருக்குள் வெறுப்பும், பகையும், சண்டையும் உண்டாவதை எப்படி எடுத்துக்கொள்வது.

திருமலைபுரத்தில் தேவர், தேவேந்திரர் என இரண்டு குடிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இருவரின் தாய்மொழியுமே தமிழ்தான். பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் சடங்குமுறைகளும் ஒன்றுபோலவேதான் உள்ளன. பெரும்பாலான குடும்பங்களின் பொருளாதார நிலையும் ஏறக்குறைய ஒத்திருக்கிறது.இருவரின் குலதெய்வமும் கருப்பசாமியே. இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தும் அண்மைக் காலங்களில் இருகுடிகளும் ஒன்றுபட்டு, உள்ளார்ந்த நட்பாக இல்லாமல் மனதளவில் பெரிய விலக்கத்தோடு வாழ்கிறார்கள்.

மனிதர் மேலும்மேலுமென முன்னேற்றமடைந்து வரும்போது, மண்ணில் வாழும்காலம் கூடும்போது, வாழ்க்கைக்கான வசதி வாய்ப்புகள் பெருகும்போது. பண்பாடு சிறப்படைந்து வரும்போது, மனிதருக்கிடையேயான உறவும், நட்பும் கூடவேண்டும், சிறக்க வேண்டும் என்பதுதானே உலக இயல்பு. மாறாக, விலக்கமும், பகையும் பெருகுகிறதெனில், மனித வாழ்வில், சமூக அமைப்பில் பிழைகள் நிகழ்கின்றன என்றே பொருளல்லவா.

எமது சிறுவயதில் இரண்டு குடிகளும் அதிக அன்போடு பழகுவார்கள். இது பற்றியெல்லாம் யாம் யார் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளோம். திருமலைபுரம்

மேலும் தொடர இங்கே க்ளிக் செய்யவும்