திருமலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவர்களும், தேவேந்திரர்களும் தங்களுக்கிடையேயான பிணக்குகளைக் களைந்து ஒற்றுமை காணவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருமலைபுரத்தின் ஒற்றுமை தமிழக அளவில் தேவர்- தேவேந்திரர் ஒற்றுமைக்கான முன்னோட்டமாக இருக்கட்டும். தேவேந்திராின் கருப்பசாமியும், தேவர்களின் பதினெட்டாம்படி கருப்பசாமியும் ஒன்றே. கருப்பசாமிகளுக்குள் பேதம் வேண்டாம்.

தேவர்-தேவேந்திரர் ஒன்றிணைப்புக்கான முதல்படியாக, திருமலைபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரர் அனைவரும் கருப்பசாமி கோவிலில் காலை நேரத்தில் ஓன்று திரண்டு தேவர் சமூகத்தோடு இணைந்து மண்ணைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அங்கிருந்து மாலை மற்றும் வஸ்திரங்கள் எடுத்துக்கொண்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அத்தனைபேரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலுக்கு அமைதியாகச் செல்லவேண்டும். எவ்விதமான பேச்சும், ஆர்ப்பாட்டமும் கூடாது. அமைதி ஊர்வலம் போன்று நிகழவேண்டும்.

கோவில் வாசலை அடைந்து அனைவரும் பதினெட்டாம்படி கருப்பசாமியை வணங்கி, எதேனும் தவறு செய்திருந்தால் பிழைபொறுக்குமாறு மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் தேவர்களுக்கெதிராக ஆயுதம்
ஏந்தமாட்டோம் எனவும், வேறுபாடுகள் எழுந்தால் பெரியவர்கள் மூலம் பேசி உரிய தீர்வு காண்போம் எனவும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

மேலும் தொடர இங்கே க்ளிக் செய்யவும்