புத்துலகம் செய்வோம் – சத்ய யுகம் புத்தகம் 2018 திசம்பர் இருபத்தியோராம் நாளன்று வலையேற்றப்பட்டது. கிட்டத்தட்ட எழுதி இருமாதங்கள் கழித்தே புத்தகத்தை வலையேற்றினோம். புத்தகத்தில் தமிழ் நிலத்தில் சாதி, மதம், மொழி சண்டையின் பேரில் மனிதர் இரத்தம் சிந்தக்கூடாது என எழுதியிருந்தோம். மாறாக, எங்கள் ஊரிலேயே சாதிச் சண்டையில் இரத்தம் சிந்தியது எமக்கு பெரியளவில் உளத்துயரைக் கொடுத்தது.

ஊரில் தேவருக்கும் (மறவர், சேர்வை) மற்றும் நாயக்கருக்கும், இறங்குமுத்தம்மன் கோவில் திருவிழா தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டார்கள். மோதலில் எடுக்கப்பட்ட காணொளிகள், தொலைக்காட்சி செய்திகள், நாளிதழ் செய்திகள் என ஏராளமாக வெளிவந்துள்ளன. எனினும் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ஊடகங்களில் தெளிவான விளக்கங்கள் வெளியிடப்படவில்லை.

எமது புகழ் மிக்க ஊர் இப்படி சாதிக்கலவரத்திற்குப் பெயர் வாங்கியது எமக்கு ஏற்புடையதல்ல. எமது ஊரைப் பற்றியும், ஊர் மனிதர்கள், சாதிகளைப் பற்றியும், ”யாம் யார்” புத்தகத்தில் ஓரளவிற்குப் பதிவு செய்திருக்கிறோம். எமது ஊர் தொப்பலாக்கரை எனும் முறையில் யாம் சில உண்மைகளை அறிவோம்.
ஊரில் சாதிவெறி பலவிதங்களில் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக, ஊருணிக்குள் தேவருக்குச் சிலை வைத்தபின், அதீத உணர்ச்சியுடன் தேவர் சாதிவெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது. முன்பு மறவர்களே சாதிப் பற்றில் தீவிரமாக இருப்பார்கள். சமீப ஆண்டுகளில் சேர்வையும் சேர்ந்துகொண்டதால், பலம் பெருமளவில் கூடிவிட்டது. அதற்கேற்ப சாதிவெறியும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. பொதுவான ஊர்த் திருவிழாக்களில்கூட தேவர் பாடல்கள் தவிர வேறு பாடல்களே போடுவதில்லை.
தேவரைப் பார்த்து நாயக்கரும் சாதிவெறியராக மாறிக்கொண்டு வருகிறார். நாயக்கருக்கு நூற்பு ஆலை வேலையால் நல்ல வருமானம். ஊரில் பல சாதியாரும் வயல்களை விற்றுவிட அதைப் பெரும்பாலும் நாயக்கரே வாங்கியிருக்கிறார். பொருளாதார பலமும் ஆள்பலமும் கூடிவிட்டதால் நாயக்கருக்கும் சாதிவெறி கலைதாக்கிவிட்டது.

மேலும் தொடர இங்கே க்ளிக் செய்யவும்