புத்துலகம் செய்வோம் – முதலாவது புத்தகம் திசம்பா் இருபத்தியோராம் நாளன்று வலையேற்றப்பட்டது. கிட்டத்தட்ட எழுதி இருமாதங்கள் கழித்தே புத்தகத்தை வலையேற்றினோம். புத்தகத்தில் தமிழ் நிலத்தில் சாதி, மதம், மொழி சண்டையின் போில் மனிதா் இரத்தம் சிந்தக் கூடாது என எழுதியிருந்தோம். மீறினால்.. எனும் கேள்வியும் எழுப்பியிருந்தோம். மாறாக, எங்கள் ஊாிலேயே சாதிச் சண்டையில் இரத்தம் சிந்தியது எமக்கு பொியளவில் உளத்துயரைக் கொடுத்தது.
ஊரில் தேவருக்கும் (மறவா், சோ்வை) மற்றும் நாயக்கருக்கும், இறங்குமுத்தம்மன் கோவில் திருவிழா தொடா்பாக பிரச்சனை ஏற்பட்டு, அதன் தொடா்ச்சியாக இரு தரப்பினரும் மோதிக் கொண்டாா்கள். மோதலில் எடுக்கப்பட்ட காணொளிகள், தொலைக்காட்சி செய்திகள், நாளிதழ் செய்திகள் என ஏராளமாக வெளிவந்துள்ளன. எனினும் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ஊடகங்களில் தௌிவான விளக்கங்கள் வெளியிடப்படவில்லை.
எமது புகழ் மிக்க ஊா் இப்படி சாதிக்கலவரத்திற்குப் பெயா் வாங்கியது எமக்கு ஏற்புடையதல்ல. எமது ஊரைப் பற்றியும், ஊா் மனிதா்கள், சாதிகளைப் பற்றியும், “யாம் யாா்” புத்தகத்தில் ஓரளவிற்குப் பதிவு செய்திருக்கிறோம். எமது ஊா் தொப்பலாக்கரை எனும் முறையில் யாம் சில உண்மைகளை அறிவோம்.
Leave A Comment